• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாவுத்தம்பதி மலைவாழ் கிராமத்தில் உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

May 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்,மாவுத்தம்பதி மலைவாழ் கிராமத்தில் உழைப்பாளர் தினத்தினை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கோமதி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாவுத்தம்பதியில் நடைபெற்ற இச்சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பார்வையாளராக கலந்து கொண்டார்.மேலும் இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர், இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களில் அந்தந்த ஊராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமை என கூறினார்.

மேலும்,கிராம சபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். முன்னதாக பள்ளி மாணவியர்களிடம் சைல்டு லைன் எண் 1098 குறித்து மாவட்ட ஆட்சிதலைவர் கற்பித்ததுடன்,மாவட்ட ஆட்சித்தலைவரது அலைப்பேசி எண்ணிலிருந்து 1098 சைல்டு எண்ணிற்கு அழைத்து பரிசோதித்தார்.

நடைபெற்ற இக்கிராம சபை கூட்டத்தில் மதுக்கரை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர். பிரகாஷ்,மாவட்ட கவுன்சிலர் ராஜன், வார்டு உறுப்பினர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க