• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கேஎம்சிஹெச் மருத்துவமனையுடன் இணைந்து JITO மகளிர் பிரிவு மாரத்தான் நிகழ்ச்சி

May 3, 2022 தண்டோரா குழு

ஜெயின் இன்டர்நேஷனல் ட்ரேட் ஆர்கனைசேஷன் (JITO) என்ற உலகலாவிய அமைப்பின் சார்பாக ஜெயின் சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து பல்வேறு சமூக நலப் பணிகளை செய்துவருகின்றனர். சுமார் 14300 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பு 11 நாடுகளில் 65 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது.

தற்போது இதன் கோவை கிளையின் மகளிர் பிரிவு சார்பாக ரன் ஃபார் மாம் மாரத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பத்து கிலோமீட்டர் ஓட்ட தொலைவை கொண்ட இந்த நிகழ்ச்சி இம்மாதம் 15-ம் தேதி நடைபெறுகிறது. தாய்மையைக் கொண்டாடுவோம் என்பது இந்த நிகழ்வின் கருத்தாக்கம் ஆகும்.இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

JITO மகளிர் பிரிவு தலைவர் பூனம் பாஃப்னா இதுபற்றி கூறுகையில்,

“தாய்மை என்பது உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாகும்,பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்னையருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பு என்றென்றும் குறைவது இல்லை. தாய்மையைக் கொண்டாடுவோம் என்ற கருத்தில் ரன் ஃபார் மாம் மாரத்தான் நிகழ்ச்சியை கேஎம்சிஹெச் மருத்துவமனையுடன் இணைந்து நடத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம்” என்று கூறினார்.

கேஎம்சிஹெச் துணை தலைவர் டாக்டர் தவமணி தேவி பழனிசாமி கூறும்போது,

“ஒரு உன்னத நோக்கத்திற்காக JITO கோவை மகளிர் பிரிவுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற உயர்வான பணிகளுக்கு கேஎம்சிஹெச் தொடர்ந்து ஆதரவு அளித்துவருகிறது. மருத்துவ உதவி தேவைப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உலகத்தரமான சிகிச்சைகளை சலுகைக் கட்டணத்தில் கேஎம்சிஹெச் அளித்திடும்” என்று கூறினார்.

இந்த மாரத்தான் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு யூ டூ கேன் ரன் (YouTooCanRun) என்ற முன்னணி விளையாட்டு மேலாண்மை நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. “JITO கோவை மகளிர் பிரிவுடன் இணைந்து கோவையில் முதன்முதலாக இப்படி ஒரு நிகழ்ச்சிக்கான ஒரு நல்வாய்ப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் தரமான நிகழ்ச்சியை நாங்கள் வழங்குவோம்” என்று யூடூகேன்ரன் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக இயக்குனர் பி. வெங்கடராமன் தெரிவித்தார்.

கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி மற்றும் JITO கோவை தலைவர் ரமேஷ் பாஃப்னா செய்தியாளர் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.

மாரத்தான் 10 கிமீ மற்றும் 5 கிமீ ஆகிய குறிப்பிட்ட நேரத்தில் கடக்க வேண்டிய இரு தூரப்பிரிவுகளில் நடைபெறுகிறது.இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் அளிக்கப்படும்.இது தவிர மாரத்தானில் கலந்து கொள்வோரை ஊக்கப்படுத்தும் வகையில் கால வரையறை அற்ற 3 கிமீ ஓட்டமும் நடைபெறும். மாரத்தானில் கலந்து கொள்ள விரும்புவோர் www.youtoocanrun.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் படிக்க