• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தேசிய கயிறு வாரிய மாநாடு கோவையில் நாளை துவக்கம் – மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

May 4, 2022 தண்டோரா குழு

கயிறு தொழிற்சாலை சட்டம் 1953-ன் படி மத்திய கயிறு வாரியம் அமைக்கப்பட்டது. நாட்டில் உள்ள கயிறு உற்பத்தி மற்றும் மேம்பாட்டுக்கான இந்த வாரியம், தென்னை உப பொருட்களின் மேம்பாட்டுக்கான அறிவியல், தொழில்நுட்பம், நவீனமயமக்கால், தரமேம்பாடு, மனித வள மேம்பாடு, சந்தை மேம்பாடு மற்றும் தொழிலாளர் நலத்திற்கான அனைத்தையும் செயல்படுத்தி வருகிறது.

கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் 48 அமைப்புகள், 29 சந்தை விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் கிராமப்புற பொருளாதரத்தில் மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. தென்னை நார் தொழிற்சாலைகள் கேரளாவில் அதிக அளவில் உள்ளன. நாட்டின் பிற பாகங்களில் பரவலாக உள்ளன.

கயிறு வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் ஃ நிகழ்ச்சிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், பயிற்சி திட்டங்கள், நிதியுதவிகள், நார் தொழிற்சாலை அமைத்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி சந்தை மேம்பாடு, தொழிலாளர் நல திட்டங்கள் போன்றவைகளை கயிறு வாரியம் மேற்கொண்டு வருகிறது.

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம்,இந்திய அரசின் கயிறு வாரியத்ததுடன் இணைந்து, இந்திய நிறுவன தேசிய கயிறு வாரிய மாநாட்டினை நாளை மே 5ம் தேதி லீ மெரிடியன் ஓட்டலில் நடத்துகிறது. 75 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆசாடி க அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இது நடக்கிறது. மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இணை அமைச்சர் பானுபிரதாப் சிங் வெர்மா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தென்னை பயிராகும் மாநிலங்களின் அமைச்சர்களோடு மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலந்துரையாடுகின்றனர்.தென்னை மேம்பாட்டுக்கும், கயிறு தொழில் வளர்ச்சிக்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், மத்திய, மாநில,யுனியன் பிரதேசங்களுடன் இணைந்து சிறப்பான தென்னை நார்,கயிறு மேம்பாட்டுக்கான திட்டங்களை கலந்து ஆலோசனை செய்வதாகும். இந்த தொழில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவும், சிறந்த முறையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,மாநில அரசுகள் முக்கிய பங்காற்றிடவும் வழி வகுக்கப்படும். மேலும் புதுமையான படைப்புகள் குறித்து மத்திய அமைச்சர்கள்,அதிகாரிகளிடம் விளக்க ஒரு தளமாக இது அமையும்.

விவாதிக்கப்படும் முக்கிய பொருள்கள் வருமாறு:

1. காயர் விகாஷ் யோஜ்னா பற்றிய செயல் திட்டம்
2. தென்னை பயிரிடுதல் மற்றும் தேங்காய் உற்பத்தியின் அவசியம்
3. தென்னை மட்டைகளின் பயன்பாட்டினை அதிகரித்தல்
4. கயிறு துறையில் மதிப்பு கூட்டு பொருட்கள்
5. மத்திய மாநில அரசு துறைகளில் நார் பொருட்களின் கட்டாய கொள்முதல்
6. கயிறு வாரியத்தின் சந்தை மேம்பாட்டு உதவி திட்டங்கள்
7. ஏற்றுமதி வசதி வாய்ப்பு திட்டங்கள்
8. நார் துறையில் உள்ள கடன் வசதி திட்டங்கள்
9 .கயிறு துறையில் பாரத பிரதமரின் வேலை வாய்ப்புக்கான திட்டங்கள்
10. மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்களை அறிதல்
11. மாநில அரசின் கயிறு தொழிலாளர்களுக்கு மாநில அரசின் நல திட்டங்கள்
12. மேலும் பல விபரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

கயிறு தொழில் மேம்பாட்டுக்காக நாடு முழுவதும் உள்ள கயிறு தொழில் நிறுவனங்கள் கோவையில் மே 5, 2022 அன்று நடக்கும் இந்த மாநாட்டில் பங்கேற்க அனைவரையும் அழைக்கிறோம். இந்த நிகழ்ச்சியையொட்டி, கயிறு வாரியம் 2015-16 முதல் 2018 -19 வரை சிறப்பாக செயல்பட்ட 27 தென்னை நார், கயிறு தொழிற்சாலைகளுக்கு 44 விருதுகள் வழங்கப்படுகிறது. ஏற்றுமதி, உள்நாட்டு விற்பனை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில் முனைவோர், சிறப்பாக செயல்படும் கூட்டுறவு மற்றும் தொகுப்புகள் போன்றவை விருதுகளை பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சியில், புதிய பொருட்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. புவிசார் கயிறு ஜவுளி பொருட்கள், நார் மரம், நார் மெத்தை, தரை விரிப்புகள் குறித்த நான்கு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. சந்தை மேம்பாட்டுக்கான உதவிகள் மாநில அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

நார் தயாரிப்பின் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் அதன் பயன்பாடுகள், மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்குகள் நடக்கின்றன. தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் இதில் பங்கேற்று கருத்துரை, கட்டுரைகள் வழங்க உள்ளனர்.

தேசிய மாநாட்டின் தொடர்ச்சியாக காயர் மாரத்தான் போட்டி “ரன் பார் காயர்” நிகழ்ச்சி கோவை நேரு விளையாட்டு அரங்கில் மே 6-ம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. மத்திய
அமைச்சர்கள் துவக்கி வைக்கும் இந்த நிகழ்ச்சியின் கருத்தாக்கம், “உலக வெப்பமயமாதலை மீட்க தீர்வு – கயிறு நார்” என்பதாகும்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அமைச்சர்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு நார் தொழிற்சாலைகளுக்கு சென்று பார்வையிடுகின்றனர். கயிறு தொழில் மேம்பாட்டுக்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கு பாராட்டுக்கள்.

கயிறு நார் தொழில், 3 வகைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மகளிர் தொழில் மேம்பாடு, பொருளாதார மறுசீரமைப்பின்போதும் ஏற்றுமதியில் வளர்ச்சி மற்றும் முன்றாவதாக, குப்பையிலிருந்து செல்வம் சேர்க்கிறது. இந்த தொழிலில் மேற்கொள்ளப்படும் சிறிய முதலீடு, பலருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. இந்திய கிராமங்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. அங்குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதோடு, வாழ்வாதரத்தை உயர்த்தி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க