• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விவசாயிகளின் நலனுக்காக தமிழில் செயலி! அறிமுகம் செய்கிறது பிக்ஹாட்!

May 5, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல், வேளாண் உட்பொருட்கள் செயல்தளமான பிக்ஹாட் தமிழ் மொழியில் ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்திருக்கிறது. தரவுகள், தொழில்நுட்பம் மற்றும் பயிர் அறிவியல் ஆகியவற்றை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கி இப்பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்கள் திறனதிகாரம் பெறச் செய்வதே இச்செயலி அறிமுகத்தின் நோக்கமாகும்.

இப்பிராந்தியத்தில் வேளாண்மை செழுமையாக நடைபெறுகிறது.இப்பிராந்தியத்தில் வசிக்கும் சுமார் 35 விழுக்காட்டு மக்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர்.இங்கு சாகுபடி செய்யப்படும் பரப்பு ஏறக்குறைய 165260 ஹெக்டேர்கள் ஆகும். இங்கு சிறுதானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படும் முக்கியப் பயிர்களாக இருக்கின்றன.

பிக்ஹாட் நிறுவனத்தின் இணை-நிறுவனரும், இயக்குனருமான சச்சின் நந்வானா இதுபற்றி கூறியதாவது:

“சரியான, விவேகமான முடிவை விவசாயிகள் எடுப்பதற்கு உதவுவதற்காகவே பிக்ஹாட் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டிருக்கிறது. இச்செயலியைப் பயன்படுத்துவதன் மூலம் அறுவடைக்கு முந்தைய நிலையிலிருந்து, அறுவடைக்கு பிந்தைய நிலை வரை சாகுபடி செய்யும் தங்களது பயிர்களுக்கான தேவைகளை விவசாயிகளால் பூர்த்தி செய்ய முடியும்.

பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களை குறைக்கவும், விளைச்சலையும் மற்றும் பயிரின் தரத்தையும் அதிகரிக்கவும் தரமான ஆலோசனைக் குறிப்புகளை இச்செயலி உரிய நேரத்திற்குள் வழங்கும். பயிரின் சாகுபடி காலம் முழுவதிலும் விவசாயிக்கு அவருக்கெனவே பிரத்யேகமான ஆலோசனைகளை இச்செயலி வழங்கும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். தங்களது சொந்த தாய்மொழியான தமிழில் இதன் வாசகங்களை விவசாயிகள் எளிதாக வாசிக்கவும், தங்களது அறிவை இன்னும் செழுமையாக்கிக் கொள்ளவும் முடியும்,” என்று கூறினார்.

தாங்கள் கொண்டிருக்கும் அறிவையும், பெறுகின்ற தகவலையும் பலரும் பயன்படுத்துமாறு தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் கலந்துரையாடவும் “விவசாயிகள் சமூகத்தின் செயல்தளமாகவும்” இச்செயலியைப் பயன்படுத்தலாம். பயனர் முகப்பு பக்கம் மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.சாகுபடி செய்யப்படும் பரப்பளவு,புவிசார்ந்த அமைவிடம் மற்றும் மண்ணின் வகை ஆகியவற்றின் அடிப்படையில் என்னென்ன பயிர்களை எப்போது, எப்படி பயிரிடுவது என்று விவசாயிகளுக்கு அறிவியல் ரீதியிலான தகவல்களைப் பெறுவதற்கு இது உதவுகிறது.

வேளாண்மையில் ஏற்பட வாய்ப்புள்ள பாதிப்பை தணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ஒரு நிகழ்நேர தீர்வை வழங்கும் இச்செயலி, தமிழ் மொழியிலேயே பயிர்களுக்கு விதைப்பு முதல், அறுவடை வரை முழுமையான ஆலோசனைக் குறிப்புகளை வழங்கும். பரிவர்த்தனை மற்றும் நடத்தை சார்ந்த தரவைச் சார்ந்து வேளாண் உற்பத்திப் பொருட்கள் மீதான பரிந்துரைப்புகளையும், பரிந்துரைகளையும் வழங்குவதால் இச்செயலி விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கும் என்பது நிச்சயம்.

சச்சின் நந்வானா இதுபற்றி மேலும் பேசுகையில்,

“உணவு தானிய உற்பத்தி அம்சத்தைப் பொறுத்தவரை அதிகபட்ச அளவை தமிழ்நாடு மாநிலம் எட்டிவிட்டது என்று ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டும் நிலையில். விளைச்சலையும், உற்பத்தித் திறனையும் மேம்படுத்துவதற்கு இன்னும் சாத்தியமிருக்கிறது என்று வேளாண் அறிவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்விஷயத்தில் பிராந்தியத்திலுள்ள விவசாயப் பெருமக்களுக்கு நல்ல தீர்வுகளை வழங்க நவீன தொழில்நுட்பத்தையும், துல்லியமான தரவுகளையும் கொண்டிருக்கும் பிக்ஹாட் நிறுவனத்தால் உதவமுடியும்.” என்று கூறினார்.

அறிமுக விழாவில் பானு பிரசாத், தலைமை நிர்வாக அதிகாரி, பிக்ஹாட், புகழேந்தி, பேராசிரியர், தமிழ்நாடு அக்ரி காலேஜ், சஞ்சீவ ரெட்டி, தலைமை வேளாண் விஞ்ஞானி, பிக்ஹாட் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க