May 7, 2022 தண்டோரா குழு
ரயில்வே தேர்வு எழுதுபவர்களின் வசதிக்காக கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மே 8 ஆம் தேதி, மங்களூரு – கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில், நாகர்கோயில் விரைவு ரயில், ஒரு இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. கோவை-மங்களூரு இன்டர்சிட்டி விரைவு ரயில், நாகர்கோவில்-கோவை விரைவு ரயில், மே 9 ஆம் தேதி ஒரு இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படுகிறது.
கோவை – ஹஜ்ரத் நிஜாமுதீன் விரைவு ரயிலில் மே 8 ஆம் தேதியும், ஹஜ்ரத் நிஜாமுதீன்- கோவை விரைவு ரயிலில் மே 11 ஆம் தேதியும் கூடுதலாக ஸ்லீப்பர் வசதி கொண்டு ஒரு பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
கோவை – கே.எஸ்.ஆர்.பெங்களூரு உதய் விரைவு ரயில் மற்றும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு – கோவை உதய் விரைவு ரயில் மே 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஒரு இரண்டாம் வகுப்பு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு என அதில் கூறப்பட்டுள்ளது.
அதே போல் கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னை தாம்பரத்துக்கு கோவை, சேலம் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.அதன்படி,மே 7 ஆம் தேதி இரவு 10 மணிக்கு கொச்சுவேலியில் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மாலை 4 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.மே 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு,தாம்பரத்தில் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
இந்த ரயில், கொல்லம், காயன்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், எக்மோர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.