• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி’ சார்பில் தொழில் முனைவோருக்கு ‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது

May 9, 2022 தண்டோரா குழு

தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி’ சார்பில்
தொழில் முனைவோருக்கு ‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

தன்னார்வ தொண்டு நிறுவனமான கோயம்புத்துார் ஸ்டார்ட் அப் அகாடமி, கோவையில் உள்ள ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கு ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்ட உருவானது.இந்த அமைப்பு,ஸ்டார்ட் அப் தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவோருக்கு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.

ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கான “ஸ்டார் ஆப் துருவ்” விருது வழங்கும் விழா கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெஸிடென்ஸி ஓட்டலில் நடந்தது. விழாவில், ஸ்டார்ட் அப் அகாடமியின் தலைவர் ஜி கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்று பேசுகையில், ” உலகிலேயே மிகவேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பெற்று வருகிறது. நாட்டின் ஸ்டார்ட் அப் சூழல், உலகிலேயே 3வது இடத்தில் உள்ளது.

2021ம் ஆண்டில் மட்டும் 44 இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு, மிக தனித்துவமிக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. இத்தகைய ஸ்டார்ட் அப் சூழல் நாடு முழுவதும் உருவாக கொள்கைகளை வகுத்து, ஆக்கப்பூர்வமான உதவிகளை அளித்து வரும் மத்திய அரசுக்கும், மத்திய நிதியமைச்சருக்கும் மிக்க நன்றி,” என்றார்.

தலைமை விருந்தினராக பங்கேற்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில்,

” ஸ்டார்ட் அப் தொழில்களை துவக்க ஆக்கப்பூர்வமான கொள்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஸ்டார்ட் அப்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தொடர்ந்து நிலையான உதவிகளை செய்து வருகிறது. கொள்கை அளவில் துவக்க நிலையில் ஸ்டார்ட் அப் முதலீடு செய்வோருக்கு வரி விலக்கு அளித்தல், 3 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு போன்றவை முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளன.

இது, வரி விதிகளை சீராக்குவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான மூலதனங்களை உயர்த்திக் கொள்ளவும், சிரமான முதலீடுகளை எளிமையாக்கவும் உதவுகிறது. இன்னும் பல உதவிகள் ஸ்டார்ட் அப் இன்டியா இணையத்தளத்தில் விளக்கப்பட்டுள்ளன. சுயமாக சான்று பெறுதல், 9 வகையான சூழல் உடன்பாடுகள், தொழிலாளர் சட்டங்கள், ஸ்டார்ட் முதலீடுகளுக்கென சிட்பி நிதியின் நிதி வசதிகள், கடன் உறுதி திட்டங்கள் போன்ற வசதிகள் உள்ளன. இவற்றோடு மட்டுமல்ல, கூடுதலாக தொழில் பொறிப்பக மையங்கள் மற்றும் உருவாக்க ஆய்வங்களையும் அரசு நிறுவியுள்ளது.

பல்வேறு தொழில்நுட்பம் அல்லது இயந்திரங்களை அடிப்படையாக கொண்ட ஸ்டார்ட் அப்களுக்கு, இந்த மையமும், ஆய்வகமும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தங்களது புதிய கண்டுபிடிப்பை ஆய்வு செய்து மேம்படுத்தவும், உற்பத்தியை திறம்பட மேற்கொள்ளவும் உதவுகிறது.

மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த “நிதி” NIDHI (தேசிய புதுமை பயன்பாடுகள் மற்றும் மேம்பாட்டு திட்டங்கள்) அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை ஸ்டார்ட் அப் களாக மேம்படுத்தி, அவற்றின் மாதிரிகளை உருவாக்கி, அதன் பயணத்தை விரைவுபடுத்த ஆரம்ப நிலை நிதியுதவிகளை அளிப்பதை நோக்கமாக கொண்டது.

கோவையின் தொழில் முனை சூழல் பற்றி எல்எம்டபிள்யு தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, அவரது கருத்தினை பகிர்ந்து கொண்டார். புதுமை படைப்பு சூழல், கோவையை ஒரு தொழில் மையமாக மாற்ற பெரும்பாங்கற்றியவர்களையும் அவர் பாராட்டினார். கோயம்புத்துார் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், சிட்பியின் நிதி யால் நிதி, கடன் உறுதி திட்டங்கள், பொறிப்பகங்கள் மற்றும் உருவாக்க ஆய்வு மையங்கள்” உள்ளிட்டவை , தேிசய அளவில் ஸ்டார்ட் அப் தொழி்ல் சூழலை எவ்வாறு மேம்படுத்துகிறது, என்பது பற்றி விளக்கினார்.
ஸ்டார்ட் அப் அகாடமியானது, இப்பகுதியில் உள்ள ஸ்டார்ட் சமுதாயத்தினை இணைத்து, அவர்களுக்கு சரியான ஆலோசனைகளை வழங்கி, சிறந்த தொழில் முனைவோராக மாற சரியான பாதையை அமைத்துக் கொடுக்கிறது.

தங்களது தேவைக்கு ஏற்ப ஆலோசகர், ஆலோசனை பெறுபவர்களை ஒருங்கிணைக்கும் இணையத்தள வசதியை நிதியமைச்சர் துவக்கி வைத்தார். புதிய ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. உள்ளுர் தொழிலதிபர்கள் நடுவர்களாக பங்கேற்றனர். நான்கு வகையாக விருதுகள் வழங்கப்பட்டன. ” சூப்பர் ஸ்டார் விருது”, ஜூஸி கெமிஸ்ட்ரி நிறுவனம் பெற்றது.

ரைசிங் ஸ்டார் விருதினை, நியோ, விக்ரா ஓசன் டெக் மற்றும் கிளட்ச் ஹெல்த் ஆகியவை வென்றன. மகளிர் தொழில் முனைவோர் விருதான “ஷி ஸ்டார்” விருதினை, ஹெல்த் பேசிக்ஸ், 60ப்ளஸ்இன்டியா மற்றும் மை பெர்த்பிளேஸ்@என்ஏ ஆகியவை வென்றன. “எமர்ஜிங் ஸ்டார்” விருது, ஜிஎல்ஓசிஎல், அக்ரிப்ரோ இன்டஸ்ட்ரீஸ் மற்றும் நியுட்ரி ஜெனிட்டிக்ஸ் லைப் சயின்ஸ் ஆகியவை பெற்றன.ஸ்டார்ட் அப்ஸ் அகாடமியின் செயலாளர் என்.வெங்கடேஷ் நன்றி கூறினார்.

மேலும் படிக்க