• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வி நிறுவனம் சோனிலிவ் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

May 10, 2022 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான வி, தனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஈடுஇணையற்ற அசத்தலான பொழுதுபோக்கு அம்சங்களை வழங்குவதில் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரத்யேகமான முயற்சிகளின் தொடர்ச்சியாக, சோனிலிவ் உடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த புதிய கூட்டு செயல்பாட்டின் மூலம், வி வாடிக்கையாளர்களுக்கு இடைவிடாமல் தொடர்ந்து பார்த்து ரசிக்க தகுந்த ப்ரீமியம் தரத்திலான படைப்புகளைப் பார்க்கும் வாய்ப்புகளையும், கூடுதல் பலன்களுடன் கூடிய ஆட்ஆன் டேடா பலன்களையும் வழங்கப்படும். இதற்காக வி, தனது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான பலன்களை ஒருங்கிணைத்து இருக்கும் புதிய ப்ரீபெய்ட் பேக்கை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த புதிய ப்ரீபெய்ட் பேக்கில் சோனிலிவ் பிரீமியம்-க்கான சந்தாவும், கூடுதல் டேடா பலன்களும் உள்ளடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, வி புதிதாக ஆட்-ஆன் ரீசார்ஜ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் ரீசார்ஜ் மதிப்பு 82 ரூபாய். இந்த பேக் சோனிலிவ் பிரீமியம்–க்கான சந்தாவை 28 நாட்கள் வழங்குகிறது. மேலும் இத்துடன் கூடுதல் டேடா பலன்களாக 14 நாட்களுக்கும் மட்டும் பயன்படுத்த கூடிய வகையில் 4 ஜிபி டேடா அளிக்கப்படுகிறது.
இந்த புதிய அம்சங்களுடன்,வி தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான, கவர்ந்திழுக்கும், அசத்தலான படைப்புகளின் பட்டியலை தனது வி மூவிஸ் அண்டு டிவி பிரிவின் கீழ் வழங்குகிறது.

இச்சேவைகளை வி ஆஃப் வாடிக்கையாளர்கள் கண்டுக்களிக்க முடியும். விஎம்டிவி ஆஃப், 450-க்கும் அதிகமான லைவ் டிவி சேனல்களையும், லைவ் நியூஸ் சேனல்களையும், இதர ஒடிடி செயலிகளிலிருந்து ப்ரீமியம் தர படைப்புகளையும் வழங்குவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க