May 10, 2022 தண்டோரா குழு
கோவை காந்திபுரத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அரசு பேருந்து ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தியதால் 60க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து எண் 45 என்ற தனியார் பேருந்து ஊழியர்கள் டைமிங் விவகாரம் தொடர்பாக அரசு பேருந்து ஊழியர் கார்த்திக் என்பவர் மீது தாக்குதல் நடத்தியதால் தனியார் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு பேருந்து ஓட்டுனர்கள் ஆதரவாக பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
60க்கும் மேற்பட்ட பேருந்துகள் காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு சுமார் 2மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் போலீசார் அரசு பேருந்து ஊழியர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து ஆர்டிஓ தலைமையில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.