May 11, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, பாரதி நகர் பகுதியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்த ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் 24 மணி நேர குடிநீர் விநியோக திட்டத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணியினை விரைவாகவும், தரமானதாகவும், செய்துமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்,உதவி கமிஷனர் மாரிச்செல்வி, கவுன்சிலர்கள் தர்மராஜ்,கிருஷ்ணமூர்த்தி, பாக்கியம்,உதவி செயற்பொறியாளர் சுந்தர்ராஜன்,உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி,உதவி பொறியாளர் எழில் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.