May 16, 2022 தண்டோரா குழு
வாலாங்குளம் அருகே ஹைவேஸ் காலனி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 1550 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றத் திட்டமிடப்பட்டது. இதற்காக அனைத்து குடும்பங்களுக்கும் குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
அனைவருக்கும் வீடு ஒதுக்கீட்டுக்கான டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், படிப்படியாக வீடுகள் இடித்து அகற்றப்பட்டு ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்தமாக 1539 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில்,மாநகராட்சி மத்திய மண்டல உதவி நகரமைப்பு தலைவர் பாபு தலைமையிலான அதிகாரிகள் நேற்று மீதம் உள்ள 11 வீடுகளையும் இடித்து அகற்றினர்.