May 17, 2022
தண்டோரா குழு
கோவை பூமார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயண்பாடுகள் அதிக அளவில் உள்ளது என்று புகார் எழுந்தது.
இதனை அடுத்து பூ மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெரால்டு சத்ய புனிதன், ராஜேந்திரன், சலேத் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது, அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மொத்தமாக 67 கிலோ பறிமுதல் செய்ய பட்டது.
மேலும் தடைகளை மீறி பிளாஸ்டிக் கவர்களை வைத்திருந்த கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக, ரூ.12,600 அபராதமாக விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.