May 20, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் ஒண்டிப்புதூர் நாய்கள் அறுவை சிகிச்சை அரங்கத்தில் வீடற்ற நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் வீடற்ற நாய்களின் எண்ணிக்கையை தனியார் நிறுவனத்தின் மூலம் 20 முதல் 25 தன்னார்வலர்கள் உதவியுடன் தகுந்த நெறிமுறைகளை பின்பற்றி புள்ளி விவரங்களுடன் கணக்கெடுக்கப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின் நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு ஊசி மற்றும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தகவலை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.