• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மலையேறி ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு…!

May 22, 2022 தண்டோரா குழு

2022-23-ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையின் அடிப்படையில் கோவையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் மலைக்கோயிலில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை இந்து அறநிலை துறை அமைச்சர் மலையேறி ஆய்வு செய்தார்.

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தென்கைலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறி ஆய்வு மேற்கொண்டு உள்ளார்.கோவை மாவட்டம் மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதி பூண்டி வெள்ளிங்கிரி மலை உள்ளது. இங்கு சுயம்பு வடிவிலான சிவபெருமான் ஏழாவது மலையில் காட்சி அளிக்கிறார்.அவரை தரிசிக்க தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சாமி தரிசனம் செய்ய ஜனவரி முதல் வாரத்திலிருந்து மே இறுதி வாரம் வரை பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்வது இந்நிலையில் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் வெள்ளிங்கிரி மலை ஏற வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் மீண்டும் அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது. அதை தொடர்ந்து மீண்டும் பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.இந்நிலையில் இன்று காலை பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்கு குடும்பத்தினருடன் வந்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு அடிவாரப் பகுதியில் உள்ள வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மை ஆகியோரை வணங்கி ஆய்வு மேற்கொண்டு மலை ஏற துவங்கினார்.

இவருடன் பாதுகாப்பிற்காக வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு உடன் மேலும் அறநிலை துறை ஊழியர்கள் சிலர் உடன் சென்றனர். கடந்த 4 நாட்களாக மேற்கு மலைத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பொழிவு அதிகமாக உள்ளது.இவ்வாய்வின் போது இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,இணை ஆணையர் செந்தில் வேலவன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் சாமி தரிசனம் செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கோயிலின் தேவைகள் குறித்தும்,பக்தரின் வசதிகள் குறித்தும், தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வரும் அடிப்படை தேவைகள் குறித்தும், அன்னதானக்கூடத்தில் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு,பக்தர்கள் தங்கும் கூடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக வசதிகள் போன்றவை குறித்தும் பக்தர்கள் மற்றும் அலுவலரிடம் கேட்டறிந்தார்.பின்னர் வெள்ளிங்கிரி மலைக்கு நடைபாதையாக சென்று மலைபாதைகளை பார்வையிட்டார்.

மேலும் படிக்க