• Download mobile app
27 Apr 2025, SundayEdition - 3364
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசளித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்

May 23, 2022 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் ப்ரிஜ் மற்றும் தக்காளியை மணமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் தெற்கு நகர இளைஞரயினர் வழங்கி அசத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தெற்கு நகர இளைஞரணி பொருளாளராக இருப்பவர் இரும்பு கடை அக்கீம்.இவரது மகள் அப்சாநாவிற்கும் ஹாரிஸ் என்பவருக்குமான திருமண நிகழ்ச்சி கோவை குணியமுத்தூர் ஐ.ஜே.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய் யுவராஜ் , தெற்கு நகர இளைஞரணி தலைவர் பைசல், செயலாளர் முகம்மது அலி,சமூக ஆர்வலர் என்றும் மக்கள் பணியில் இந்தியன் வுட்ஸ் குப்புராஜ்,கவுரவ தலைவர் ராம்குமார் மற்றும் செயலாளர் உன்னி,பொறுப்பாளர் மணி மற்றும் தெற்கு நகர இளைஞரணி நிர்வாகிகள், சிவபாலன் ரமேஷ் சந்தோஷ் ஆஷிக் , மகேந்திரன் கார்த்திக் மெர்சல் செந்தில், நாகராஜன்,பாலமுருகன், குமார் உட்பட விஜய் மக்கள் இயக்க மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி மற்றும் ப்ரிஜ் ஆகிய பரிசுகளை வழங்கி ஆச்சரியப்படுத்தினர்.இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்களும் அங்கு கூடியிருந்தவர்களும் வியப்பின் உச்சிக்கு சென்றனர்.இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த முறை தக்காளி விலை உயர்வின் போதும் விஜய் ரசிகர்கள் இதே போல மணவிழாவில் தக்காளி பரிசு வழங்கியது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க