• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கல்லூரி மாணவர்களின் அறைகளை குறி வைத்து செல்போன் திருட்டு – கேரளா நபர் கைது

May 24, 2022 தண்டோரா குழு

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட் தர்மா (21). இவர் கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் தனியாக அறையெடுத்து தனது நண்பர்களான சல்மான், ஆகாஸ், மாறன், ஜெஸ்வந்த், சாம்வேல், தியாகு உள்ளிட்டோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அறையில் இருந்த அனைவரும் தூங்கிய நிலையில், மறுநாள் நேற்று அதிகாலை பார்த்த போது அறையில் இருந்த ரூ.1.66 லட்சம் மதிப்பிளான 5 செல்போன்கள் மாயமானது தெரியவந்தது.இதையடுத்து ரிச்சர்ட் தர்மா செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் மாணவர் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலை 3 மணியளவில் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், ரிச்சர்ட் தர்மாவின் அறையில் இருந்து செல்போன்களை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. மேலும் இதே போல் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் அடிக்கடி செல்போன் திருட்டு போனதாக புகார்கள் வந்திருந்ததால், செட்டிபாளையம் போலீஸார் தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் செல்போன் சிக்னலை வைத்து, தலைமறைவாக இருந்த மர்ம நபரை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணை பிடிப்பட்ட நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த கிரீஸ் (44). என்பதும், இவர் கோவையில் கிடைக்கும் வேலைகளை பார்த்துக் கொண்டே கல்லூரி மாணவர்களின் விடுதிக்குச் சென்று திறந்து இருக்கும் அறைகளுக்குள் புகுந்து செல்போன் திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், செல்போன்களை பறிமுதல் செய்து, அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க