• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை புதூரில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் விளையாட்டு மைதானத்தை ஆய்வு

May 25, 2022 தண்டோரா குழு

கோவைபுதூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், கழக தீர்மான குழு இணைச் செயலாளர் அரிமா முத்துச்சாமியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவையில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, அண்மையில் அரிமா இயக்கம் மற்றும் தி.மு.க.சுற்றுச்சூழல் அணி சார்பாக,கோவை புதூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்தல் இலவச மருத்துவமனை கட்டுதல் நடை பாதை அமைத்தல் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்வுகளின் துவக்கவிழா, கழக தீர்மான குழு இணைச் செயலாளர் அரிமா முத்துச்சாமி ஏற்ப்பாட்டில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மைதானத்தை சீரமைக்கும் பணிகள் கோவை புதூர் மைதானத்தில் நடைபெற்று வந்தது.இந்நிலையில்,தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கோவைபுதூரில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவருடன்,புறநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சிஆர்.இராமச்சந்திரன், தீர்மானக்குழு இணைச்செயலாளர் முத்துச்சாமி, பகுதி கழக பொறுப்பாளரும்,மாநகராட்சி நியமனக்குழு உறுப்பினர் குனியமுத்தூர் இராஜேந்திரன், தணிக்கை இராஜேந்திரன்,அவை தலைவர் மணி,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சுரேஷ்,வட்டச்செயலாளர் செந்தில், ஸ்பார்க் மணி, சண்முகம்,ஆர்.ஜே.பாலு பகுதி குழு உறுப்பினர் மாதவன்,ஏ.பி.ராஜா மற்றும் நிர்வாகிகள் கிட்டி பாபு,ஷானு, மகளிரணி யசோதா, உஷா, சமீனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,

கோவை மாவட்டத்தில் கோவை புதூர் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பயன்படுத்துவதற்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு தற்காலிகமாக பயன்பட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இந்த பகுதியில் இருக்கின்ற இளைஞர்கள் விளையாட்டு வீரர்கள் வகையில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில், மாலை நேரங்களில் நல்ல காற்றை சுவாசிக்க கூடிய குறுங்காடுகள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், குறுங்காடு அமைக்கும்போது சுற்றுச்சூழல் துறை மூலம், மரக்கன்றுகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க