May 27, 2022 தண்டோரா குழு
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் மாவட்ட கண்காணிப்பாளர் எஸ்.பி.பத்ரிநாராயணன் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணனிடம் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர் கூறியதாவது :
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, ஆதாய கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு. சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில். 71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.17,12,830/- மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் 169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.20,55,006/ மதிப்புள்ள 2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.