May 28, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வார்டு எண் 26க்குட்பட்ட தண்ணீர்பந்தல் சாலை பீளமேடு மயான தகனமேடை அருகில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதல் உடனடியாக சாக்கடையை தூர்வாரிட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனடிப்படையில் அப்பகுதிக்கு கோவை மாநகராட்சி பொதுசுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் ஆகியோர் தலைமையில் மாஸ்கிளினீங் நடைபெற்றது.
சுமார் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் நவீன வாகனங்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டு மாஸ் கிளினீங் நடைபெற்றது.