June 1, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கோவைக்கு பணிக்கு செல்வோர், கல்லூரி, பள்ளி கல்லூரிக்கு செல்வோர் என தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் அன்மையில் மேட்டுப்பாளையம் வந்த ரயில் பயணி ஒருவர் இறப்பு சான்றிதழ் ஒன்றினை மறந்து விட்டு விட்டு சென்றுள்ளார். அதனை கண்டெடுத்த மற்றொரு பயணி ஒருவர் சான்றிதழை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய மேனேஜரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் குழுக்களில் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சமூக வலைதளங்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்ட சான்றிதழ் பெரும் விமர்சனத்தை பெற்று வைரல் ஆகி வருகிறது. சான்றிதழில் மூதாட்டியின் பெயர் ரங்கம்மாள் எனவும், இறந்த தேதி 18-05-1999 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சான்றிதழ் வழங்கிய தேதி 09-06-1990 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மூதாட்டி இறப்பதற்கு 9 ஆண்டுகளுக்கு முன்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இச்சான்றிதழ் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் பெறப்படவில்லை. மேலும் சமூக வலைதளத்தில் பரவல் இச்சான்றிதழ் குறித்து உன்மை தன்மை அறியப்படும், என்றார்.