June 6, 2022
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை அடுத்து கோவை மாநகராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டி, தண்ணீர் தொட்டி, தண்ணீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ள இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டிகளில் அபேட் மருத்துகளை ஊற்றுகின்றனர். அதேபோல் வீட்டில் மற்றும் அருகில் தேவையில்லாத பொருட்களில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் குடிநீரில் அல்லது தண்ணீர் தேங்கி வைத்துள்ள இடங்களில் கொசு புழுக்கள் வளர்ந்திருத்தால் அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.