June 8, 2022
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பாக 50வது உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாப்பட்டது. சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் பொருட்டு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியை இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்தார். இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் இளநிலை, முதுநிலை, முனைவர் மற்றும் பட்டயப்படிப்பு மாணவர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை மாணவர்கள் பேடையில் அரங்கேற்றினர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதல்களும் வழங்கப்பட்டது. மேலும், ஐடிசி நிறுவனத்தின் கழிவு மேலான்மை திட்டமான ‘வாவ்’ மறுசுழற்ச்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், இப்பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறையின் தலைவர் மகேஸ்வரி, இயற்க்கை வள மேலாண்மை இயக்குனர் பாலசுப்பிரமணியன், பேராசிரியர் தேவகி, பீமா ஜுவல்லர்ஸ் நிர்வாகிகள் உட்பட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.