June 8, 2022
கோவை மாநகராட்சி வெள்ளளூர் குப்பை கிடங்கு பகுதியில் கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டர். அப்போது அங்கு நடைபெற்று வந்த மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்பொழுது மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை பொதுமக்கள் எவ்வாறு பிரித்து தருகின்றனர் எந்தந்த பகுதிகளில் பிரித்து தராமல் அப்படியே தருகின்றனர் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மாநகராட்சி முழுவதும் பொதுமக்கள் மக்கும் குப்பைகளையும், மக்காத குப்பைகளையும் பிரித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதையடுத்து வெள்ளலூரில் 61.62 ஏக்கரில் அமையவிருக்கும் புதிய ஒருகினைந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளையும் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை, மாநகரப்பொறியாளர் ராமசாமி, கவுன்சிலர்கள் அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்பாஸ்கர், கருப்பசாமி, உதவி பொறியாளர்கள் கணேசன், சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.