June 10, 2022 தண்டோரா குழு
நீட்ஸ் திட்டத்தின் கீழ் சுயமாக தொழில் துவங்க கோவை மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்ட சுய வேலை வாய்ப்பை உருவாக்க, நீட்ஸ் திட்டத்தின் கீழ் நிதியாண்டில் (2022-2023) 24 தொழில் திட்டங்களுக்கு மானியமாக ரூ. 2 கோடியே 37 லட்சம் வழங்க இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் 5 கோடி வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் துவங்க www.msmonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்கான தகுதிகள், 21ம் வயதை கடந்தவர்கள், 12ம் வகுப்பு, பட்டம், பட்டயம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் தொழில்சார் பயிற்சி முடித்தவர்களும், குறிப்பாக முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 35 மற்றும் சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயதாக 45 இருக்க வேண்டும். சிறப்புபிரிவில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.
ஆகவே தகுதியும் ஆர்வமும் உள்ள தொழில் முனைவோர்கள் புதிய தொழில் முனைவொர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.