December 31, 2016 தண்டோரா குழு
ஜனவரி 1 முதல் ஏடிஎம்-களில் நாளொன்றுக்கு ரூ.4,500 வரை எடுக்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார். அப்போது , வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஒரு டெபிட் கார்டு மூலம் நாளொன்றுக்கு ரூ.2,500 வரை எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.4,500 எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஜனவரி 1-ஆம் தேதி இது அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் வங்கிகளில் நேரடியாகப் பணம் எடுக்கும் உச்ச வரம்பு குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. எனவே, பணம் எடுக்கும் வார உச்ச வரம்பு, அதே ரூ.24,000 என்று தொடர்கிறது.
இந்த 24,000 ரூபாய், புதிய 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கப்படும் என்று அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.