June 13, 2022
தண்டோரா குழு
தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மற்றும் சிங்கை நகர மாணவரணி சார்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்காக இலவச ஆட்டோ சேவை கோவையில் துவங்கப்பட்டது.
தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதியின் போர்படை தளபதி அவர்களின் ஆலோசனைப்படி,அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச ஆடோ சேவை துவக்க விழா, மாவட்ட மாணவரணி மற்றும் சிங்கை நகர மாணவரணி சார்பாக நடைபெற்றது.
மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தலைமையில்,நடைபெற்ற இதில்,மாவட்ட நிர்வாகிகள் அருண்குமார்,ரோகித் சிங்கை நகர தலைவர் சுரேஷ், செயலாளர் தளபதி தமிழ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது.பள்ளிகள் திறப்பின் முதல் நாளான இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணியினர் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்காக இலவச ஆட்டோ சேவையை துவக்கி உள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐந்து ஆட்டோக்கள் கோவை மாநகர் பகுதிகளில் தொடர உள்ள சேவையில்,மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள உக்கடம்,சுந்தராபுரம், ஒண்டிப்புதூர்,தெலுங்குபாளையம்,செல்வபுரம் என ஐந்து பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றி சென்று அவர்களது பள்ளிக்கு சென்று இறக்கி விடுகின்றனர்.
போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கும் விதமாக இந்த சேவையை செய்ய முன் வந்ததாகவும்,ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை வழங்கி வந்ததாகவும், அந்த வரிசையில் தற்போது அரசு பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை துவக்கி உள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு தெரிவித்தார்.
இதன் துவக்க விழாவில், கோவை குட்டி ரஞ்சித்,அமல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.