June 17, 2022 தண்டோரா குழு
தமிழக சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழு தலைவர் கோவி. செழியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவை மனுக்கள் குழு சார்பில் இன்றைய தினம் கோவை மாவட்டத்திலும் நாளைய தினம் நீலகிரி மாவட்டத்திலும் மனுக்கள் மீதான விசாரணையை கள ஆய்வு செய்யப்படும். மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக நேரடி கள ஆய்வு செய்து விரைவாக நிறைவேற்றுவதற்கு உறுதுணையாக இருப்போம்.
இந்த நிகழ்வில் எங்களுடன் சட்டப்பேரவை செயலர் பங்கெடுத்துள்ளார். அவிநாசி மேம்பால பணிகள் 2024ம் ஆண்டு முடியும் தருவாயில் விரைவாக நடந்து கொண்டு வருகிறது. இந்த பால பணிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், முதல்வர், பொருப்பு அமைச்சர் ஆகியோ துரிதமாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாங்கள் ஆய்வு செய்துள்ள இந்த இடங்களில் ஐந்து இடங்கள் மனுதாரர் கோரிக்கை வைத்த இடங்களும், ஒரு இடம் நாங்கள் பொதுமக்கள் நலன் கருதி ஆய்வு செய்துள்ளோம். உரிய அதிகாரிகளிடம் விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தியுள்ளோம். பணி தொடர்ந்து நடைபெறும். 122 மனுக்கள் கள ஆய்வுக்கு எடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.