June 17, 2022
தண்டோரா குழு
கோவை சிங்காநல்லூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருபவர் மினிமோள் (43).இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.இவரது வீடு மசாஜ் சென்டர் அருகே உள்ளது.இந்நிலையில் இவரது வீட்டிற்கு சென்ற கெளசிக் என்பவர் மற்றும் அவரது நண்பர் ஒருவர் மினிமோளை மசாஜ் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளனர்.அதற்கு அவர் மசாஜ் சென்டர் வருமாறு கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த கெளசிக் மற்றும் அவரது நண்பர் மினிமோளை கத்தியால் தாக்கியுள்ளனர்.அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உதவிக்கு வந்துள்ளனர். பின்னர் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் மினிமோள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.