• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சகாப்தத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் வெற்றி வரலாறு’

June 17, 2022 தண்டோரா குழு

குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சார்பில் ‘பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சகாப்தத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையின் வெற்றி வரலாறு’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாணவர்களிடையே சிறப்புரையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வெளியுறவு துறை சார்ந்து பாஜக அரசால் பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உலக அளவில் இந்தியாவின் பெருமை வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பின்பு சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன்,

பல தலைமுறைகளுக்கு முன்னால் வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் தற்போது தங்களையும் இந்தியர்கள் என குறிப்பிட வேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதுவே எட்டு ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறந்த செயல்பாடாக நான் கருதுகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் தாங்களும் இருக்க வேண்டும் என வெளிநாடுவாழ் இந்தியர்கள் கருதுகின்றனர். உக்ரன் போர் சூழலிலும், ஏமன் நாட்டில் ஏற்பட்ட பதட்டமான காலங்களிலும், கோவிட் காலகட்டத்திலும் வெளிநாடுகளில் தத்தளித்த இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு கொண்டு வருவதில் பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

எதிர்காலங்களிலும் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் அமையும்’ என அவர் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய இணையமைச்சர், சமீபத்திய நிகழ்வுகளால் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகளில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் படிக்க