June 18, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் டி.பி. சாலையில் நடைபாதை தளங்களில் தெருவிளக்கு கம்பங்களில் மாநகராட்சி அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அகற்றப்பட்டது.
மேலும் சம்பந்தப்பட்ட 2 விளம்பரம் வைத்த நிறுவனத்திடமிருந்து தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் அபராதமாக வசூலிக்க மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் அபராத தொகை மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வசூல் செய்யட்பட்டது. மேலும், கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.