• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கொஹிரன்ட் பிக்ஸெல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் புதிய அலுவலகம் தொடக்கம்!!

June 19, 2022 தண்டோரா குழு

கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் பிரைவேட் லிமிடெட், உலகளவில் தகவல் தொழில்நுட்ப சேவைகளை அளிக்கும் நிறுவனங்களில் மிக வேகமாக வளர்ச்சிக் கண்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். கோவையில் இந்நிறுவனம் சரவணம்பட்டியில், 159, சத்திரோடு, ராகம் டவர்ஸ் என்ற முகவரியில் தனது புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது.தமிழ்நாட்டில் தனது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் வகையில் சென்னையை அடுத்து,கோவையில் கொஹிரன்ட் பிக்ஸெல் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் புதிய அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தொழில் நிறுவனமாக இருந்தாலும் அவற்றின் அத்தியாவசிய செயல்பாட்டுக்கான அம்சங்களை எளிதில் மேற்கொள்ளும் வகையிலான மென்பொருள்களை உருவாக்கி கொடுப்பது,மொபைல் போன்களில் பயன்படுத்தும் அப்ளிகேஷன் எனப்படும் செயலிகளை உருவாக்குவது,நிறுவனங்களின் தயாரிப்புகள் சரியான முறையில் தீர்வுகளைக் கொடுக்கிறதா என்பதை கண்டறியும் டெஸ்ட் ஆட்டோமேஷன் மற்றும் அதிநவீன ரோபோட்டிக் ப்ராசஸ் ஆட்டோமேஷன் மற்றும் சப்போர்ட் இவற்றுடன் இந்நிறுவனத்தின் அனைத்து வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கு பல்வேறு தளங்களிலான அதிநவீன தீர்வுகளை கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம் வழங்குகிறது.

கோவையில் ஆரம்பமாகும் புதிய அலுவலகத்தின் துவக்க நிகழ்ச்சியில் கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனர் மற்றும் இயக்குனர் வி. அருண்குமார் கோபிநாத் பேசுகையில்,

“எங்களது கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம்ஸ் என்பது ஒரு குடும்பம்.அந்த குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இது ஒரு பெருமை மிக்க தருணம்.இந்த நிறுவனத்தை நாங்கள் 2017-ம் ஆண்டில் 3 பேருடன் துவக்கினோம். தற்போது 100-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. அமெரிக்கா,சிங்கப்பூர் இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை தங்களது வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள, கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் நிறுவனம்.

இதுவரையில் 100-க்கும் மேற்பட்ட ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.கோவையில் ஆரம்பமாகி இருக்கும் எங்களது அலுவலகம் எங்கது செயல்பாடுகளை விரிவுப்படுத்தும்,முயற்சியின் அடுத்தக்கட்டமாக அமைந்திருக்கிறது.மக்கள் மத்தியில் பெயர் பெற்ற கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் அதிகமிருக்கும் கோவையில்,பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க திறன்வாய்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.இதன் மூலம் எங்களது நிறுவனத்தின் பணியாளர்களின் எண்ணிக்கையை, எதிர்கால தேவைகளுக்கேற்ப உயர்த்தவும், செயல்பாடுகளை மேலும் விரிவுப்படுத்தவும் உள்ளுர் திறமைசாலிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரவும் இது ஒரு நல்ல வாய்ப்பபாக அமைந்துள்ளது,” என்றார்.

கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்,பல்வேறு பிரிவுகளில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட,திறமைசாலிகளால், தொழில்ரீதியாக நிபுணத்துவம் உள்ள குழுவினால் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவர்கள்,பல்வேறு நிறுவனங்களில் தங்களது பணி காலத்தில் முக்கிய பொறுப்புகளை சிறப்பான வகையில் மேற்கொண்டுள்ளனர். இந்த அனுபவமிக்க குழுவினால் தங்களது வாடிக்கையாளர்களாக இருக்கும் நிறுவனங்களின் வளர்ச்சியையும்,அடுத்தக்கட்ட மாற்றத்தையும் மிக விரைவாக,குறிப்பிடும் வகையில் மாற்றியமைத்து வருகிறது.

இதை குறிப்பிட்டு சொல்வதென்றால்,தங்களது வாடிக்கையாளர் நிறுவனங்களின் வாகனங்கள் எங்கேயிருக்கின்றன என்பதை தானியங்கி முறையில் கண்காணிக்கும் ஆட்டோமேட்டெட் சொல்யூஷன்களையும்,பெற்ற ஆர்டர்களை எளிதில் நிர்வகிக்கும் மேலாண்மை தீர்வுகளையும்,அலுவலக செயல்பாடுகளின் நிர்வாக அம்சங்களையும்,டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான கடனுதவியின் ஆரம்ப நிலை முதல் அதை தொடர்ந்து கண்காணிக்கும் மேலாண்மை தீர்வுகளையும்,நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் தளத்தையும் கட்டமைத்து கொடுப்பதில் கொஹிரன்ட் பிக்ஸெல்ஸ் நிறுவனம் உலகத்தரத்திலான தீர்வுகளை வழங்கி வருகிறது.

மேலும் படிக்க