June 20, 2022
தண்டோரா குழு
கோவை மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாள் கூட்ட அரங்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள கோவை மாவட்டத்தை சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சுதந்திர போராட்ட தியாகிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு புத்தகங்களை பரிசாக அளித்து நன்றி தெரிவித்தனர்.இந்த புகைப்பட கண்காட்சியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 60 சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன இது நிரந்தரமாக இங்கேயே வைக்கப்பட உள்ளது.