June 21, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட 53 மற்றும் 60 வது வார்டுக்குட்பட்ட வரதராஜபுரம் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தில் திடக்கழிவு மேலாண்மை செய்யும் பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிங்காநல்லூர் உழவர்சந்தையில் ஆய்வு மேற்கொண்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், போதிய
சமூக இடைவெளியினை கடைபிடித்து பொருட்களை வாங்கிச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தினார். மேலும், உழவர்சந்தையில் பழுதடைந்த மேற்கூரையை விரைவில் புனரமைத்து வியாபாரிகளுக்கு வழங்க வேளாண்மைத்துறை பொறியாளர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டார். பின்னர், வரதராஜபுரம் மற்றும் சிங்காநல்லூர் கால்வாயை தூர்வாரி கழிவுகளை அகற்றிட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது உதவி கமிஷனர் மாரிச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சுந்தர்ராஜன், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.