• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அவினாசிலிங்கம் பல்கலையுடன், ஏ.வி.பி., ஆய்வு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

June 22, 2022 தண்டோரா குழு

கோவை ராமநாதபுரம், ஏ.வி.பி., ஆய்வு நிறுவனம் மற்றும் அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை இணைந்து ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஏ.வி.பி., ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்றது.

இது குறித்து ஏ.வி.பி., மேலாண்மை இயக்குனர் தேவிதாஸ் வாரியர் கூறுகையில்,

‘‘ஏ.வி.பி., ஆய்வு நிறுவனம், அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் ஹோம் சயின்ஸ் மற்றும் பெண்களுக்கான உயர்கல்வி நிறுவனம் ஒன்றிணைந்து, கல்வி, ஆயுர்வேத ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டு உழைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த ஈடுபாடு ஆயுர்வேதத்தில் ஆய்வுகூட சோதனை, பட்டப்படிப்பு, உயர்கல்வி, ஆய்வு உள்ளிட்டவற்றில் கல்வித்தகுதி பெற முடியும். தொடர்ந்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த படிப்புகள், பாரம்பரிய மருத்துவம், செயற்கை நுண்ணிறவு, ஆட்டோமேஷன், உணவு அறிவியல், ஊட்டச்சத்து, மருத்துவ ஜவுளி, கல்வி முறை, பிற தொழில்நுட்ப அசம்சங்கள் குறித்து சமஸ்கிருத மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து ஆய்வுகள் இணைக்கப்படும்,’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.வி.பி., மேலாண்மை இயக்குனர் தேவிதாஸ் வாரியர், அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை வேந்தர் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று, ஆயுர்வேத மருத்துவ ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மேலும், அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலையின் துணை வேந்தர்கள் பாரதி ஹரிசங்கர், கவுசல்யா, ஏ.வி.பி., ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் சுஜித் எர்னேசத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க