• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

99 நகரங்களை வெறும் 82 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்த சாதனை !

June 23, 2022 தண்டோரா குழு

கோவை மண்ணைச் சேர்ந்த ஜி.டி.விஷ்ணு ராம், சமீபத்தில் ‘தனி நபரால் ஒரு காரில் அதிவேக தங்க குவடிரிலேட்ரல்’ என்ற சாதனையை வெற்றிகரமாக செய்து முடித்ததற்காக பல மதிப்புமிக்க சாதனை புத்தகங்களில் நுழைந்துள்ளார்.

தமிழகத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவரான கலைஞர் மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இந்த சாதனை முயற்சியை துவங்கும் விதமாகவும் ஜூன் 3, காலை 10.30 மணி அளவில் கலைஞர் நினைவிடத்தில் இருந்து, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்,சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தயாநிதி மாறன் எம்.பி,ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்க இந்த தங்க குவடிரிலேட்ரல் முயற்சி துவங்கியது.

இந்த சாதனை முயற்சியில்,99 நகரங்களை 99 மணி நேரத்திற்குள் கடக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.சென்னையில் இருந்து புறப்பட்டு கொல்கத்தாவை அடைந்து அங்கிருந்து டெல்லி சென்று அங்கிருந்து மும்பையை அடைந்து இறுதியாக ஜூன் 6 ஆம் தேதி இரவு 9 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை திரும்பவேண்டும். மொத்த தூரம் சுமார் 6000 கி.மீ.விஷ்ணு மிகவும் அனுபவம் வாய்ந்த கார் ஒடுனராகவும் உடற்பயிற்சி ஆர்வலராக இருப்பதால் இந்த நெடுதூர பயணத்தை எளிதாக தனது டொயோட்டா ஃபார்ச்சூனரில் செய்து முடித்தார்.

அவர் திட்டமிட்ட பகுதிகளை வெற்றிகரமாக கடந்து, இலக்கை விட முன்னதாகவே முயற்சியை முடித்தார். 99 நகரங்களை, மொத்தம் 5870 கிமீ தூரத்தை வெறும் 82 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து, லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகியவற்றில் நுழைந்தார். முந்தைய சாதனையாக 103 மணிநேரம் இருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.

இது விஷ்ணுவின் முதல் சாதனை கிடையாது. இதற்கு முன்னதாகவே இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியாவின் உலக சாதனை புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார்.
திரு.விஷ்ணு சிறுவனாக இருந்தபோது அதிக உடல் எடை கொண்டவராக இருந்ததால் பலரால் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டார். உடல் வலிமை மீது அப்போது அவருக்கு மிக ஆர்வம் எழுந்ததால் கடுமையாக உடற்பயிற்சி செய்து தன்னுடைய உடலையும் தன்னம்பிக்கையும் பலப்படுத்திக் கொண்டார்.

தன்னுடைய சொந்த மண்ணான கோவையில் இருக்கக்கூடிய பல மக்களின் உடல் வலிமையை உறுதி செய்து தருவதன் மூலம் அவர்கள் இலக்கை அடைய வழிவகுக்கும் முடியும் என்று அவர் நம்புவதால் ‘6th Gear Fitness’ எனும் உடற்பயிற்சிக் கூடத்தை நிறுவி அதை கவனித்து வருகிறார்.ஒவ்வொரு முறையும் ஒரு சாதனை முயற்சியை கையில் எடுக்கும் பொழுது ஏதாவது ஒரு நல்ல கருத்தை மக்களிடம் பிரபலப்படுத்தும், சமூகத்திற்காக உழைக்கக்கூடிய முன் களப்பணியாளர்கள் போன்றவர்களை பெருமைப்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அதை செய்வார்.

அடுத்த கட்டமாக 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 18 நாட்கள் கடக்க வேண்டும் என்கின்ற திட்டத்தை அவர் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க