July 1, 2022 தண்டோரா குழு
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கவியருவி. இங்கு விடுமுறை மற்றும் அனைத்து நாட்களிலும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து கவி அருவியில் குளிப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த ஆறு மாதமாக கொரோனா நோய் தொற்று காரணமாகவும், சரியாக நீர்வரத்து இல்லாததால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் கவியருவியில் குளிக்க தடை விதித்து இருந்தனர்.தற்போது மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் இன்று அருவியில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்த உடன் சுற்றுலா பயணிகளை குளிப்பதற்கு அனுமதிக்கப்படுவது குறித்து பரிசீலக்கப்படும் என தகவல் தெரிவித்தனர்.