• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சர்வதேச அளவில் “ஐவர் ஹாக்கி செயற்கை புல்வெளி” மைதானம் துவக்கம்

July 7, 2022 தண்டோரா குழு

தமிழகத்திலேயே முதல் முறையாக
கோவை காளப்பட்டி, நேரு நகரில் அமைந்துள்ள சுகுணா பிப் பள்ளியில் “ஐவர் ஹாக்கி செயற்கை புல்வெளி மைதானம்” அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக “பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்தரம்” கலந்து கொண்டார். தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் ஜே. மனோகரன் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவில் சுகுணா கல்வி குழுமம் மற்றும் “கோயமுத்தூர் மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் லட்சுமி நாரயணசுவாமி” தலைமை வகித்து பேசியதாவது :-

மக்களிடம் ஹாக்கி போட்டியை ஊக்குவிக்கவும், கோவை மண்டலத்தை சுற்றியுள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையிலும் கோவை மாவட்ட ஹாக்கி சங்கத்துடன் சுகுணா கல்வி நிறுவனம் இணைந்து இந்த ஹாக்கி மைதானத்தை உருவாக்கியுள்ளது.

இந்த மைதானம் தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் தான் 2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் 40 க்கு 36 மீட்டர் அளவில் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தில் ஒவ்வொரு ஹாக்கி போட்டி விளையாடுவதற்கு முன்பும் சுமார் 75,000 லிட்டர் தண்ணீர் செலவிட வேண்டும். தற்போதைய தண்ணீர் சிக்கனத்தை கருத்தில் கொண்டு இந்த மைதானம் “டேர்ப் சாண்டு” எனப்படும் சிலிக்கான் மணல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஹாக்கி மைதானம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தான் உள்ளது. இந்தியாவில் மஹாராஸ்ட்ரா மாநிலத்தில் மாநில போலீஸ் துறைதான் அமைத்துள்ளது.

இந்த மைதானத்தில் “பைவ்; எ சைடு” (ஒரு அணிக்கு 5 நபர் வீதம்) விளையாட முடியும். இந்த மைதானம் குருணை ரப்பர் பேஸ்ட் மூலம் உடையாத வகையில் 11 மில்லி மீட்டர் உயர அளவில் சிலிகான்; சான்டு மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிய அளவில் ஸ்பிரிங்ளர் முறையில் தண்ணீர் தெளித்தால் மட்டும் போதுமானது. ஒரு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் டேர்ப் சாண்டு மாற்ற வேண்டும்.

இந்த ஐவர் ஹாக்கி போட்டியை தான் தற்போது உலக ஹாக்கி அமைப்பு ஊக்கப்படுத்தி வருகின்றது. இதில் நிபந்தனைகள் குறைவு. பார்வையாளர்களுக்கும் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாகவும் ரசிக்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அரசு உதவி இல்லாமல் எங்களது சொந்த முயற்சியில் எங்களது அறக்கட்டளை மூலம் துவக்கப்பட்டுள்ளது. இந்த ஹாக்கி மைதானத்தை எங்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது வெளியில் உள்ள மாணவ மாணவியரும் பயன்படுத்தலாம். நமது மேற்கு மண்டலத்தில் எங்குமே இது போன்ற ஹாக்கி மைதானம் இல்லை. இதனால் மாணவ மாணவியர்கள் ஹாக்கியில் உயர்வதற்கு தடையாக உள்ளது. அந்த தடையை போக்குவதற்காக இந்த மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் கல்லூரியில் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ மாணவியர்களுக்கு சலுகையும், இலவச கல்வியும் வழங்கி வருகின்றோம். என்றார்.

ஐவர் ஹாக்கி செயற்கை புல்வெளி மைதானத்தை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. சண்முகசுந்தரம் துவக்கிவைத்து பேசும்போது :-

இந்த ஹாக்கி விளையாட்டு 12-ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. ஹாக்கி விளையாட்டானது 1000 வருடங்களுக்கு முன்பு இருந்த விளையாட்டாகும். ஹாக்கி போட்டி இந்தியாவில் 1885 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இன்று 135 ஆண்டுகளுக்கு மேலாக இந்த விளையாட்டு இந்தியாவில் விளையாடப்படுகின்றது. அப்போது இந்தியாவில் இருந்த கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்த வெள்ளைக்காரர்கள் விளையாண்டார்கள்.

இந்த மேற்கு மண்டலத்தில் அமைக்கப்பட்ட இந்த மைதானம் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகும். 1887 – ம் ஆண்டு முதன் முதலில் ஹாக்கி ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது லண்டனில் தான். தமிழகத்திலேயே முதன்முதலில் இந்த பள்ளி வாளாகத்தில் துவக்கப்பட்டுள்ளது. இது போல் தனியார் ஹாக்கி மைதானம் அமைக்க விரும்பினால் மூன்றில் இரண்டு பங்கு செலவு செய்ய அரசு தயாராக உள்ளது. என்று பேசினார்.

விழாவில் தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் ஜே.மனோகரன் பேசியதாவது,

வேர்ல்டு பெடரேசன் ஆஃப் ஹாக்கி மிகவும் கவனமாக இருப்பது செயற்கை மைதானம் அமைப்பதில் தான். இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இது போன்ற செயற்கை மைதானம் அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றது. இதன் மூலம் மாணவ மாணவியர் உலகத்தரத்திற்கு முன்னேற நல்ல வாய்ப்பாக அமையும். கோவை மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் ஏற்கனவே இந்திய அணியில் அதிகம் பங்குபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பாக மாரிஸ்வரன் மற்றும் கார்த்தி ஆகியோர் இடம்பிடித்து உள்ளனர். இவர்கள் ஆசியா கோப்பையிலும் விளையாடியுள்ளார்கள். தமிழகம் சீனியர் அளவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தமிழ்நாடு ஹாக்கி கெரளவ செயலர் செந்தில் இராஜ்குமார் பேசும் போது :- கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மைதானம் துவங்கப்பட்டு பாதியில் உள்ளது. அதை செப்பனிட்டு அதன் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஹாக்கி விளையாட்டை சர்வதேச அளவில் எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக இங்கு ஐவர் டெர்ப் மைதானம் துவக்கப்பட்டுள்ளது. என்றார்.

மேலும் விழாவில் சுகுணா கல்வி குழுமத்தின் தாளாளர் திருமதி சுகுணா இலட்சுமி நாராரயணசுவாமி கலந்து கொண்டார். சுகுணா கல்வி குழுமத்தின் செயலர் ஸ்ரீகாந்த் கண்ணன் மற்றும் சுகுணா பள்ளிக் குழுமத்தின் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இவ்விழாவில் மூத்த ஹாக்கி விளையாட்டு வீரரகள் பங்கேற்று விளையாடி சிறப்பித்தனர்.

மேலும் படிக்க