July 8, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதப் வெளியிட்ட அறிக்கையில்,
‘கோவை மாநகராட்சியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் சொத்து வரி பொதுச்சீராய்வு பணிகள் நடைபெற்று வந்தது. ஆகையால் பொதுமக்கள் இந்த நியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகள் செலுத்த முடியாத நிலை இருந்தது. தற்போது மேற்குறிப்பிட்ட பணிகள் முடிவடைந்துள்ளது.
நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்புகள் கணினி மென்பொருளில் எழுப்பப்பட்டுள்ளது. ஆகையால் 7ம் தேதி முதல் நடப்பு நிதியாண்டிற்கான சொத்துவரி கேட்பு தொகைகளை அனைத்து மாநகராட்சி வரிவசூல் மையங்களில் மாலை 4 மணி வரையிலும் மற்றும் இணையதள வாயிலாகவும் செலுத்தலாம்’
இவ்வாறு தெரிவித்துள்ளார்.