• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சமூக நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி

July 9, 2022 தண்டோரா குழு

கல்வி,வேலை வாய்ப்பு,இடஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் சமூக நீதி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.இதில் சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டார்.

கல்வி வேலைவாய்ப்பு, பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவைகளில் சமூக நீதியை காக்கும் வகையில்,சமூக நீதியை கண்காணிப்பு குழுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.இந்நிலையில் சமூக நீதி குறித்த விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவை போத்தனூர் சாலையில் உள்ள தென்றல் மகாலில் நடைபெற்றது.இதில் சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.எம்.முகம்மது ரபீக் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர்,கோவை மாவட்டத்தில் சமூக நீதி திட்டத்தில் சமூக பொருளாதார சுகாதார மேம்பாடு சுகாதாரத்துறை மூலமாக மருத்துவ காப்பீடு வீடு தேடி மருத்துவம் போன்றவற்றில் மூலம் இலவச மருத்துவம் பெற வழிவகை செய்து கொடுப்பது,பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை நலத்துறை மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வருவது குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில்,துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன்,கராத்தே சந்திரன், ராணி,ஜூலியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திராவிட இயக்கத்தின் மாநில பொறுப்பாளர் கா.சு.நாகராசு அறிமுக உரையாற்றினார்.இதில்,இஸ்லாமிய,கிறிஸ்தவ கூட்டமைப்பினர் மற்றும் ஓ.பி.சி.கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,

கல்வி,வேலை வாய்ப்புகளில் சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறைகள் மற்றும் புரிதலை அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும், தமிழகத்தில் சமூக நீதி நிலை நிறுத்த இது போன்ற கண்காணிப்பு குழுவை உருவாக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையை அளித்துள்ளதாக தெரிவித்தார்.மேலும்
சமூகநீதி உரிய முறையில் பின்பற்றபடாவிட்டால் அது குறித்த தகவலை இந்தக் குழு அரசுக்கு அளித்து நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க