• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரவிந்த் கேஜ்ரிவால் மீது ஷு வீச்சு

January 2, 2017 தண்டோரா குழு

ஹரியானாவில் புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியான மாநிலத்தில் உள்ள ரோஹ்டாக் நகரில் புதுதில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை(ஜனவரி 1) பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது, 26 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் கேஜ்ரிவால் மீது காலனியை வீசியுள்ளார். அது மேடையின் அருகில் விழுந்துள்ளது.ஆனால் கேஜ்ரிவால் மீது படவில்லை. உடனே அங்குயிருந்த காவல்துறையினர் அந்த வாலிபனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “புதுதில்லி முதல்வர் மீது 26 வயது விகாஸ் என்னும் வாலிபன் ,சட்லெஜ் – யமுனா நதி திட்டம் குறித்து பேசியது ஹரியான மக்களுக்கு எதிராக இருக்கிறது என்று கோபம் கொண்டு அவர் மீது காலனியை வீசியுள்ளார்” என்றார்.

இச்சம்பவத்தை குறித்து புதுதில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில் கூறியதாவது:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்று கூறினேன். அதற்காக அவருடைய ஆதரவாளர்கள் என்மீது காலணியை வீசினார். நாங்களும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கும் எங்களுக்கு வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் பின்னால் இருக்கும் சதியை குறித்தும் பிர்லா மற்றும் சஹாரா நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட லஞ்சத்தை குறித்த உண்மையை கட்டாயம் வெளிப்படுத்துவேன்.

5௦ நாட்களில் பணப்பிரச்சனை சீராகும் என்று மோடி தெரிவித்தார். 5௦ நாட்கள் முடிந்த பிறகும் மக்களின் வேதனை குறையவில்லை.

மோடி அவர்களே, உங்கள் குழுக்களை கொண்டு எங்களுடைய அனைத்து நடவடிக்கைகளை விசாரணை செய்வதை போல சஹாரா மற்றும் பிர்லா நிறுவங்களிடம் நீங்கள் லஞ்சம் பெற்றதை குறித்து நாங்களும் ஒரு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்வோம் அதற்கு சம்மதமா?

நாங்கள் எந்த தவறும் செய்யாததால் எந்த விசாரணை குறித்தும் எங்களுக்கு பயமோ கலக்கமோ இல்லை. ஆனால், நீங்கள் ஏன் விசாரணைக்கு அஞ்சுகிறீர்கள்?

இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருந்தார்.

புதுதில்லி முதல்வர் மீது ஷு வீசிய இச்சம்பவம் முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஏப்ரல் 1௦ம் தேதி, 28 வயது வேத் பிரகாஷ் என்னும் வாலிபன் அரவிந்த் கேஜ்ரிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிக் கொண்டு இருந்த போது அவர் மீது ஷுவை வீசிய சம்பவம் குறுப்பிடத்தக்கது.

மேலும் படிக்க