July 14, 2022 தண்டோரா குழு
மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட், ஸ்பார்க் மிண்டா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும், இது, இந்திய சில்லறை சந்தையில் 17 ஹெல்மெட் மாடல்களை, 145 வகைகளில் அறிமுகப்படுத்தியது. உலகளவில் இந்தியா மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் ஹெல்மெட் சந்தையாக வளர்ந்து வரும் நேரத்தில், பி2சி வெளியிடத்தில் ஸ்பார்க் மிண்டாவின் நுழைதலை இந்த வெளியீடு குறிக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில், இந்த நிறுவனம், 200 பிளஸ் விநியோகஸ்தர்களைச் சேர்த்து, விநியோக வலையமைப்பை மேலும் வலுவாக்கிக்கொண்டு, நாடு முழுவதும் பிரத்யேக ஸ்பார்க் மிண்டா பிராண்டட் அவுட்லெட்டுகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த ப்ரொடெக்டிவ் ஹெட் கியர் ஆனது, எக்கனாமி, மிட் மற்றும் பரீமியம் ஆகிய மூன்று வாடிக்கையாளர் வகைகளில் கிடைக்கும்.
ஸ்பார்க் மிண்டா, நாடு முழுவதும் இரு சக்கர ஓட்டுனர்களின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்ய 1500 ஃபைபர் பாகங்களை (பிளாஸ்டிக்-வார்ப்படம் செய்யப்பட்ட, இரு சக்கர வாகனங்களுக்கான வர்ணம் பூசப்பட்ட கூறுகள்) அறிமுகப்படுத்துவதாக மேலும் அறிவித்தது. நாட்டில் கிடைக்கும் மிகப்பெரிய அளவிலான ஃபைபர் பாகங்களைக் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்த எண்ணிக்கை அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2400 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட் தலைவர் மற்றும் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் மிண்டா கூறும்போது,
“கடந்த ஆறு தசாப்தங்களாக, ஸ்பார்க் மிண்டா, வாகனத் துறையில் முன்னணி தீர்வுகளை வழங்குவதைக் கண்டுள்ளது. குழுவின் அனுபவத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் விரிவான ஆராய்ச்சிக்கான அதன் உத்வேகம், எதிர்காலத்திற்கான தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் கூட்டிணைவை விட முன்னேறியுள்ளது.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா உள்ளது. நுகர்வோர் வணிகப் பிரிவிற்கான எங்கள் முயற்சி, நாட்டின் இந்தச் சின்னமான வளர்ச்சி வரலாற்றின் ஒரு பகுதியாக எங்களை மாற்றுவது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள இரு சக்கர வாகன ஓட்டுனர்களுக்கு மிக உயர்ந்த தரமான பாதுகாப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும்”.
மிண்டா கார்ப்பரேஷன் லிமிடெட், ஆஃப்டர்மார்க்கெட் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி நீரஜ் ஷரன் கூறுகையில்,
“இன்னும் அமைப்புசாரா ஆட்டக்காரர்களால் வழங்கப்படுகிற 40-45 சதம் பிரிவுடன், உலகின் மிகப்பெரிய ஹெல்மெட் சந்தையாக இந்தியா உள்ளது, இந்த விரிவான தயாரிப்பு வரம்பின் வெளியீடு, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் ஹெல்மெட் பிரிவில் முன்னணி வீரர்களில் ஒருவராக மாற எங்களுக்கு உதவும். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இரு சக்கர வாகன ஓட்டுனருக்கும் சான்றளிக்கப்பட்ட ஹெல்மெட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம். முன்னோக்கிச் செல்லும்பொழுது, நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வணிகப் பொருட்களை விரிவுபடுத்தவும், நாட்டிலுள்ள எங்கள் இரு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மிகப்பெரிய அளவிலான ஃபைபர் பாகங்களைக் கொண்டிருக்கவும் திட்டமிட்டுள்ளது”.
தற்போது, ஸ்பார்க் மிண்டாவில் உள்ள ஆஃப்டர் மார்க்கெட் டிவிசன், பூட்டுகள், வயரிங் ஹார்னஸ், கருவிகள், ஆட்டோ எலக்ட்ரிக்கல் பாகங்கள் (ஸ்டார்ட்டர் மோட்டார்), ஃப்ளாஷர், ரிலேக்கள், சிடிஐ, வைபர், கேபிள், வடிகட்டி, லூப்ரிகண்ட், பிரேக் ஷ_, கிளட்ச் பிளேட் மற்றும் பேரிங்.உள்ளிட்ட 12 தயாரிப்பு வரிசைகளுடன், இந்தியா முழுவதும் 500 பிளஸ் விநியோகஸ்தர்கள் மற்றும் 12,000 பிளஸ் சில்லறை விற்பனையாளர்களின் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.