• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல் உப்பை பயன்படுத்தி ஒலிம்பியாட் சின்னத்தை வடிவமைத்து அசத்திய பள்ளி மாணவியர்

July 15, 2022 தண்டோரா குழு

கோவையில்,செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,கல் உப்பை பயன்படுத்தி செஸ் போர்டு வடிவில், ஒலிம்பியாட் சின்னத்தை வடிவமைத்து அசத்திய பள்ளி மாணவியர்.

200 நாடுகளை சேர்ந்த செஸ் விளையாட்டு. வீரர்கள் கலந்து கொள்ளும் செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் சென்னையில் வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்கவுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நடைபெற உள்ள இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை மணியகராம்பாளையம் பகுதியில் உள்ள கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் நடைபெற்றது.

இதில் தினமும் செஸ் விளையாடுவதால் நம்முடைய வாழ்வில் ஏற்படும் பயன்கள், மாற்றங்களை எடுத்துரைத்து, குழந்தைகளிடையே அதனை பகிர்ந்து கொள்ளும் விதமாக நடைபெற்றது.இதில் ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ,மாணவிகள் இணைந்து, இரண்டு மணி நேரத்தில்,ஒரு டன் கல் உப்பை பயன் படுத்தி,செஸ் போர்டு,படத்தில் செஸ் ஒலிம்பியாட் சின்னத்தை உருவாக்கி சாதனை படைத்தனர்.இதில் கல் உப்பை பல்வேறு வண்ணங்களாக உருவாக்கி நாற்பது அடி நீளம் மற்றும் இருபது அடி அகலத்தில் செஸ் போர்டை நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் சேர்ந்து உருவாக்கினர்.

இது குறித்து பள்ளி நிர்வாகிகள் அருள் ரமேஷ்,பூங்கோதை ஆகியோர் கூறுகையில்,

மிகவும் பழமையான அறிவு திறனை மேம்படுத்தும் செஸ் விளையாட்டு குறித்து மாணவ,மாணவிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த முயற்சி நடைபெற்றதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க