July 15, 2022 தண்டோரா குழு
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை பார்வையிட்ட மத்திய நிதி இனையமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது நேற்று முதல் கோவையில் உள்ளேன் நேற்று சொன்னது போல மத்திய அரசின் திட்டங்களை பார்வையிடேன். அனைத்து அதிகாரிகளையும் சந்தித்தேன். சில திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தபட்டுள்ளன சில திட்டங்கள் முறையாக செயல்படுத்தபட வில்லை.
இன்று கோவையில் நடைபெறும் வேளாண் கண்காட்சியை பார்வையிட்டேன். பாஜக நிர்வாகிகளை சந்தித்தேன் நிறை குறைகளை கேட்டறிந்தேன்.அதனோடு ஜவுளி மற்றும் தொழில்துறை விவசாயிகளை சந்தித்தேன் ஜவுளி மற்றும் விவசாயத்துறையில் பல பிரச்சனைகள் உள்ளது. ஜி எஸ் டி பிரச்சனை குறித்து கூறியுள்ளனர். சில பிரச்சனைகள் தீர்க்க முடியும் சிலவற்றை நீண்ட காலத்தின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்த முடியும்.
சில திட்டங்கள் மத்திய அரசாலும் சில திட்டங்கள் மாநில அரசலும் செயல்படுத்தபட்டு வருகிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றம் சாட்டினர்.
மத்திய அரசுன் திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில்லை இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன். 5 லட்சம் காப்பீட்டு திட்டங்கள் சில மருத்துவமணைகளில் இல்லை அதேப்பொல் அதற்கான கார்டுகளும் வழங்கபட வில்லை இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளேன்.
ஸ்மார்ட் சிட்டி என்பதில் பிரச்சினை உள்ளது மத்திய அரசு அதற்கான 1500 கோடி நிதியை வழங்கியுள்ளது கோவை மாநகரில் இத்திட்டம் தொடர்பாக அடுத்த முறைமுறை ஆய்வு செய்யபடும் என தெரிவித்தார்.