• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குரங்கம்மை நோய் கண்டறிய தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்

July 18, 2022 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர்,

குரங்கம்மை பாதிப்பு 63 நாடுகளில் பெரியளவிலான தாக்கம் இந்தியாவில் கேரளா மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.தமிழகத்தின் சென்னை, கோவை,மதுரை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் குரங்கம்மை பரவலால் பாதிக்கப்பட்ட 63 நாடுகளிலிருந்து வருபவர்களை கண்காணிக்க மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து கண்காணித்து வருகிறது.

கோவையில் காலை மற்றும் மாலையில் வரும் சர்வதேச விமானங்களில் 150 முதல் 170 பயணிகள் வருகிறார்கள்.ஜூலை மாதத்தில் விமான பயணிகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனாவோ குரங்கம்மை நோயோ கண்டறியப்படவில்லை.

கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்.டி பி சி ஆர் மையம் தயார் நிலையில் உள்ளது.யாரும் ஆறிகுறியுடன் வந்தால் அவர்களை தனிமைபடுத்த ஒரு படுக்கை வசதியுடன் தனி அறை தயார் நிலையில் உள்ளது. மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையோ அல்லது பிற இடங்களிலோ பிரத்யேகமாக ஒரு வார்டு தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குரங்கம்மைக்கென சென்னையை தொடர்ந்து கோவையிலும் பத்து படுக்கைகளுடன் கூடிய தனி வார்டு தயார் படுத்தப்பட உள்ளது. குரங்கம்மை நோய் கண்டறிய தமிழகத்தில் ஒரு ஆய்வகம் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சென்னையுல் ஆய்வு மையத்தை பயன்படுத்துவோம்.

கேரளா -தமிழகம் இடையே 13 இடங்களில் பொது பாதை உள்ளது முகம் மற்றும் முழங்கையிலோ கொப்புளங்கள் இருந்தால் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.வருகிற ஞாயிற்று கிழமை அன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி போட உள்ளோம்.

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தமிழகத்தில் முறையாக செயபடுத்தபடவில்லை என்ற மத்திய நிதித்துறை இணை அமைச்சர் குற்றச்சாட்டு கூறியது குறித்த கேள்விக்கு, அவர் எந்த இடத்தில் தொய்வு என கூறினால் அதனை சரி செய்வோம்.அது தெளிவில்லாத விஷயமாக கருதுகிறோம்.ஒன்றிய அமைச்சரை கடந்த மாதம் இரு முறை சந்தித்துள்ளோம். அப்போது மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் நீங்கள் செயல்படுத்தும் முறையை எங்களுக்கு தாருங்கள் என கூறினார்.

ஒன்றிய அமைச்சர் உலகளவிலான மாநாட்டிற்கு தமிழக சுகாதார துறை அமைச்சரான என்னை அழைத்திருந்தார்.சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிகிறது.ஆனால் இணை அமைச்சர் தெரியாமல் பேசுகிறார்உலகிலேயே தமிழகத்தில் தான் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் அவரவர் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது. இதுவரை 81 வது லட்சத்தை தொட இருக்கிறோம்.

தமிழகத்தில் இதுவரை பாதிப்பு இல்லாததால் குரங்கம்மை குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.தற்போது பரவ துவங்கியுள்ளதால் பிரதான நகரங்களிலும் குரங்கம்மை நோய் குறித்த விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.மழைக்காலம் துவங்கியுள்ளதால் கொசு புழுக்களை அதனை லார்வா நிலையிலேயே அழிக்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது.பருவமழை வரும் போது டெங்கு நோய் வரும்.ஆனால் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் படிக்க