• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ராமநாதபுரம் மேம்பாலத்தில் மீண்டும் விபத்து

July 20, 2022 தண்டோரா குழு

கோவை-திருச்சி சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. ஏற்கனவே பாலத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர், அதிவேகம் காரணமாக பாலத்தின் மேல் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இதன் காரணமாக அந்த பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்ட ஒரு சில தினங்களிலேயே மீண்டும் ஒருவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.இப்படி 3 பேர் பலியான நிலையில், மேம்பாலத்தின் இரு புறங்களிலும் இரும்பு பென்சிங் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனிடையே இன்று கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற இரண்டு கார்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் சென்றன.
அந்த கார்கள் மேம்பாலத்தில் சுங்கம் ரவுண்டானா அருகே சென்றன.அப்போது அங்கிருந்த வேகத்தடைகளை இரண்டு கார் ஓட்டிகளும் கவனிக்கவில்லை என்று தெரிகிறது. திடீரென பிரேக் பிடித்ததில் இரண்டு கார்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இதில் காரில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இந்த மேம்பாலத்தில் விபத்துகள் நடைபெற்று வருவது கோவை மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் படிக்க