July 25, 2022 தண்டோரா குழு
கடந்த 28 வருடங்களாக வாடகை கட்டிடத்தில் வணிகம் செய்து வந்த நிலையில்,வாடகை தாரர் அளித்த புகாரில்,கட்டிடத்தின் முன் கொட்டகை அமைத்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் வாடகை கட்டிடத்தில் அலுவலகம் அமைத்து வணிகம் செய்து வந்தவர் மல்லையசாமி.இந்நிலையில் கட்டிட உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்டிட உரிமையாளர் மல்லையசாமியை காலி செய்ய கூறியுள்ளார்.
இது தொடர்பாக மல்லையசாமி கூறுகையில்,
நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு,தாம் நிலத்தில் கட்டிடம் மற்றும் உட்புற வேலைகளுக்கு செலவு செய்த,ரூ.3.5 கோடியை தர வலியுறுத்தி, 2வது கூடுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மாவட்ட அமர்வு நீதிமன்றம், கோவை.நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஜனவரி மாதம்,அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்ற போது,அலுவலகத்திற்கு எதிரே உள்ள காலி நிலத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து அமர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.