July 26, 2022 தண்டோரா குழு
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளையின் சார்பாக இன்று சுமார் 75 குடும்பங்களுக்கு இலவச தைuயல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
கோவை போத்தனூர் சாலையில் உள்ள பாத்திமா கனி திருமண மண்டபத்தில் ஜமாத்தே இஸ்லாமிக் நடத்தி வரும் நான்கு தையில் பயிற்சி மையங்களில் ஆறு மாத பயிற்சி தொழில் பயிற்சி தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு சுய தொழில் தொடங்கவும் தன் காலையில் சொந்தக் காலில் நிற்கவும் பெண்கள் முன்னேற்றத்திற்காகவும் பெண்கள் தற்சார்பு அடைய 74 தையல் இயந்திரங்கள் இலவசமாக பரிசாக வழங்கப்பட்டது.
ஜமாத் தலைவர் பி.எஸ். உமர் பாரூக் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை மாவட்ட சிறுபான்மை நல அலுவலர் துணை ஆட்சியர் ரமணன், ரூட்ஸ் கம்பெனி எம் டி ஒ எ பாலு, ஆம்பியர் மின்சார வாகனங்கள் உரிமையாளர் ஹேமலதா அண்ணாமலை, பார்க் கல்லூரி குடும்பங்கள் சிஇஓ அனுஷா ரவி, சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சுவலி, நிர்மலா கல்லூரி செயலாளர் டெக்ஸிட்டி, கர்மல் கார்டன் ஸ்கூல் கரஸ்பாண்டன், தலைமையாசிரியர் ஹிதாயா கல்லூரி தாளாளர் முகமது மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி,
ஜமாத்தே இஸ்லாமிய தமிழக மகளிர் அணி தலைவி கதீஜா காஜா, இஸ்லாமிய ஹிந்த்
மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம், அரபா ஸ்டோர்ஸ் குழுமத்தின் உரிமையாளர் ஹாசிம் பாய், மற்றும் ஜமாத் பொறுப்பாளர்கள் சமுதாய தலைவர்கள் கல்வியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் முனைவர் சையது அபுதாஹிர் ஜமாத் கிழக்கு மண்டல தலைவர் ஒருங்கிணைத்தார்.
சிறப்பு விருந்தினர்கள் சிறப்பு உரை ஆற்றினார்கள். மௌலவி இஸ்மாயில் சிறப்புரையும் நிகழ்த்தினார். லைஃப் ஜூன் மெடிக்கல் மொபைல் கிளினிக் இலவச நடமாடும் மருத்துவர் வாகனம் குழுவினரும் பங்கேற்று இருந்தனர்.