July 26, 2022 தண்டோரா குழு
ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனமானது கோயம்புத்தூரில் ப்ரீ – ஓண்டு சொகுசு கார் Facility சென்டரான ஆடி அப்ரூவ்டு; ப்ளஸ் (Audi Approved: plus) அதிநவீன ஷோரூமானது அவிநாசி சாலை, தொட்டிபாளையம் பிரிவில் திறக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்த ஆடி இந்தியாவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான்,
“கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிராந்தியத்தில் சொகுசு கார்கள் மற்றும் ப்ரீ-ஓண்ட் சொகுசு கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. புதிய கார் வாங்குபவர்களுக்கு சேவையாற்றும் விதமாக பிராந்தியத்தில் எங்களிடம் வலுவான இருப்பு உள்ளது.ஒவ்வொரு ப்ரீ-ஓண்ட் வாகனமும் ஆடி அங்கீகரிக்கப்பட்ட: ப்ளஸ் ஷோரூம்களில் காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்படுகிறது.
கார் வாங்கும் போது வாடிக்கையாளர்களின் மன அமைதியை உறுதி செய்வதற்காக 300+ மல்டி-பாயின்ட் செக்கப் மற்றும் முழுமையான பல-நிலை தர சோதனைகள் மற்றும் முழுமையான ஆன்-ரோடு சோதனைகளில் இயந்திர, வெளிப்புற பாடி ஒர்க், உட்புறம் மற்றும் மின்சார சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. ஆடி அங்கீகரிக்கப்பட்ட: பிளஸ் திட்டத்தின் கீழ், ஆடி இந்தியா ஆனது 24×7 சாலையோர உதவி மற்றும் யூஸ்டு கார் வாங்குவதற்கு முழுமையான வாகன ஹிஸ்டரியையும் வழங்குகிறது.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் மூலம் எளிதான நிதி மற்றும் காப்பீட்டு நன்மைகளையும் பெறலாம் என்றார்.
ஆடி கோயம்புத்தூர் ப்ரின்சிபல் டீலர் ஆர்.ஆனந்தகிருஷ்ணன் கூறும்போது,
“ இந்தியாவில் ஆடியுடன் நாங்கள் நீண்டகால கூட்டாண்மை கொண்டுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஆடி அங்கீகரிக்கப்பட்ட புதிய மையமான ஆடி அப்ரூவ்டு; ப்ளஸ் சென்டரின் திறப்பு விழா நடைபெறுவதைக் காணும் போது பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். ஆடி குடும்பத்திற்குள் வரும் புதியவர்களை வரவேற்பதற்கும், பயனுள்ள, நீண்ட கால உறவை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்றார்.