• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவில் நோக்கியா சி21 பிளஸ் சில்லறை விற்பனையிலும் ஆன்லைனிலும் அறிமுகம்

July 28, 2022 தண்டோரா குழு

நோக்கியா போன் ஸ்மார்ட் போன் குடும்பத்தின் சி தொடரில் புதியதாக சேர்ந்துள்ளது நோக்கியா சி21 பிளஸ். 10,299 ரூபாயில் துவங்கும் இந்த போன், அழகான வடிவமைப்பில் மட்டுமின்றி, வலுவான கட்டமைப்பு தரத்தில், நீண்ட நாள் உழைக்கும் பேட்டரியை கொண்டுள்ளது. அந்த நாட்களில் இருந்த புகழை கொண்டாடும் தரத்தில் அமைந்துள்ளது.

நோக்கியா சி21 பிளஸ், விலை, விபரங்கள் மற்றும் வடிவமைப்புகளால் ஆனது. இன்றைய நிலையில் குறைவான பட்ஜெட்டில் உள்ள கைபேசி. வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு நாள் அனுபவ பயன்களைக் கொண்ட சிறப்பம்சங்களைக் கொண்டதாக உள்ளது.

இந்தியா மேனா எச்எம்டி குளோபல் துணைத் தலைவர் சன்மீட் சிங் கோச்சர் அறிமுக விழாவில் பேசுகையில்,

“ஒரு ஸ்மார்ட் போனில், எச்எம்டி குளோபலிடம் பல லட்சக்கணக்கானோர் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு நாங்கள், இயன்ற அளவில் தரம், நம்பிக்கை மற்றும் நீண்ட உழைப்புடன் தர விழைந்துள்ளோம். புதுமையுடன், நீண்ட நாள் உழைக்கும், நம்பிக்கை மிகுந்த ஸ்மார்ட் போனை எதிர்பார்க்கும் இக்கால இளைஞர்களின் தேவையை உணர்ந்து நோக்கியா சி21 பிளஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி உங்களை நம்புங்கள் என்ற பிரசாரத்தை துவக்கியுள்ளோம்.

நாட்டின் ஒவ்வொரு முலை முடுக்குகளிலும் உள்ள இளைஞர்களை உத்வேகப்படுத்திய இளைஞர்களை நோக்கி எங்களது பயணம் இருக்கும்.இந்த சந்தையில் நோக்கியா ஒரு தொடர்ச்சியான, தேவையின் அடிப்படையிலான, மதிப்புமிக்க பொருளாக இருக்கும்,” என்றார்.

நோக்கியா 5050 எம்ஏஎச் பேட்டரி 3 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும் வகையில் நீண்ட நேரம் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கடினமானது பரிசோதனையில் ஒவ்வொரு பொருளும் நிலையாக நிற்பது தான். அத்தகைய கடினமான சோதனைகளை தாங்கும் வகையில் சி21 பிளஸ் தரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. உட்புறத்தில் உலோகத்தாலும், வெளிப்புறத்தில் வலிமையாக்கப்பட்ட கண்ணாடியாலும் தயாரிக்கப்பட்டுள்ளது. தூசுகள், நீர்த்துளிகள் போன்றவைகளிலிருந்து பாதுகாத்து அன்றாட பயன்பாடுகளை எளிதாக்குகிறது.

மக்கள் பலரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறிப்புகளை ஸ்மார்ட் போன்களில் தான் சேமிக்கின்றனர். வங்கிக் கணக்கு, பொழுதுபோக்கு உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் சேமிக்கின்றனர். இவற்றை பாதுகாத்திட நோக்கியா சி21 பிளஸ் இரண்டு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அம்சங்களை ஒவ்வொரு காலாண்டிலும் அப்டேட் செய்கிறது. அதோடு, கவலையின்றி பிறரிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள முகம் காட்டி திறக்கவும், கைவிரல் ரேகை திறவுகளை விஐ உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

நோக்கியா சி21 பிளஸ், ஆன்ட்ராய்ட் 11 உடன் (கோ எடிஷன்) அதிகவேக பதவிறக்கத்துடன், பேட்டரி ஆயுளை குறைக்காமல் தருகிறது. அதிக சேமிப்பு வசதியால், அதிகப்படியான வேகத்துடன் விரைந்து தகவல்களை எடுத்து தருகிறது.

எச்டிஆர் தொழில்நுட்பம், 13எம்பி இரட்டை கேமராவால் படம் பிடிக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது. போர்ட்ரேய்ட், பனாமா, அழகுபடுத்தும் உதவிகள் போன்றவையும் இதில் கொடுக்கப்பட்டிருப்பது பயனுள்ளவை. 6.5″ எச்டி பிளஸ் டிஸ்ப்ளே வீடியாக்களையும், போட்டோக்களையும் துல்லியாகவும் தெளிவாகவும் தரும் திரையாக உள்ளது.

நோக்கியா சி21 பிளஸ், டார்க் சியான், வார்ம் கிரே உடன் 3/32 ஜிபி, 4/64 ஜிபி வகையில் முறையே 10,299 மற்றும் 11,299 என்ற விலைகளில் கிடைக்கும். இ காமர்ஸ் மற்றும் நோக்கியா.காம் ஆன்லைனிலும், சில்லறை விற்பனையாகின்றன.

மேலும் படிக்க