July 30, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:
கிராமங்களில் உற்பத்தியாகும் இயற்கையுடன் கூடிய முருங்கைக்கீரை, புதினா, பிரண்டை, வல்லாரை, முடக்கத்தான் போன்ற கீரைகளில் இருந்து கலப்படம் இல்லாமல் விவசாயிகள் இயற்கை முறையில் சூப் தயாரித்து வருகின்றனர். தொண்டாமுத்தூர் பகுதிகளில் தமிழக அரசு மூலம் புத்துயிர் பெற்று வரும் உழவர் சந்தைகளில் இந்த வகை சூப் விற்பனை செய்யவும், குறிப்பாக ஆர். எஸ்.புரம் மற்றும் பிற உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் மூலிகை தன்மை கொண்ட கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.