January 2, 2017 தண்டோரா குழு
ஹோட்டகள், ரெஸ்டாரண்டுகளில் சாப்பிட செல்லும் மக்கள் தங்கள் விருப்பப்பட்டால் மட்டும் சேவை வரியை செலுத்தலாம் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட்ககள் மற்றும் உயர் ரக உணவு விடுதிகள் அனைத்திலும் சாப்பிட செல்லும் வாடிக்கையாளர்களிடம் உணவுக் கட்டணத்தோடு, சேவைக் கட்டணம் 5 முதல் 20 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.இருப்பினும், பல உணவு விடுதிகளில் சர்வீஸ் திருப்திகரமானதாக இல்லை,இதனால் சர்வீஸ் கட்டணத்தை கட்டாயமாகக் கூடாது என வாடிக்கையாளர்கள் அவ்வப்போது கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், சேவைக் கட்டணம் செலுத்துவது வாடிக்கையாளரின் விருப்பதிற்கு உரிய செயல் என்றும், நுகர்வோர் விருப்பத்திற்கு ஏற்ப அதனை பெறலாம் என மத்திய நுகர்வோர் விவகாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக, இந்திய ஹோட்டல் கூட்டமைப்புக்கு அறிவுறுத்தி யுள்ளதாகவும், விதிமுறைகளை உணவு விடுதிகள் மீறக்கூடாது எனவும் நுகர்வோர் விவகாரத்துறை குறிப்பிட்டுள்ளது.